37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளை கலக்க வருகிறது ‘கரகாட்டக்காரன்’!
37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளை கலக்க வருகிறது ‘கரகாட்டக்காரன்’!
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத வெற்றிப் படங்களில் ஒன்றாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’, புதிய தொழில்நுட்ப மெருகூட்டலுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
1989-ஆம் ஆண்டு வெளியாகி, அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் கொண்டாட்டப் படமாகவும் திகழ்ந்து வருகிறது. கிராமிய மணம், இசை, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் தனித்துவமான இடத்தைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’, தற்போது புதிய வடிவில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளது.
ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில், இப்படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப் வடிவம் மற்றும் DTS ஒலித் தரத்துடன் புதுப்பி...
