தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடையே உரையாடினார்.
அப்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் பற்றி கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட போது அஜித்குமார் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் , அனைவரையும் மதிப்பார் மற்றும் அவரை பார்த்ததுமே எனக்கு பிடித்தது.
தளபதி விஜய் அவர்களை லொயோலா கல்லூரிலேயே அவரை பார்த்திருக்கிறேன்.அமைதியானவர், தன்னம்பிக்கை உடையவர்.