Wednesday, October 28
Shadow

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கும் உத்திரவாதம்

ரஜினி நடித்து முடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி கார்த்திக் சுப்பாராஜிடம் கேட்டால், ”இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும்.” என்கிறார்.

நானும் ரஜினி ரசிகன். அவருடைய படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். அனைத்து அம்சங்களும் என்படத்தில் இருக்கும்’ என்று உத்தரவாதம் தருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்.