
விஷ்னு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள கதாநாயகன் திரைப்படம் ஒரு காமெடி படம் முதல் பாதி பாதி காமெடி இரண்டாம் பாதி முழு காமெடி
வாரக்கடைசியில் குடும்பத்தோடு போய் சந்தோசமாக படம் பார்த்து ரசித்துவிட்டு வரலாம் குழந்தைகளோடு போய் பார்க்கலாம் பெரிசா எந்த ஆபாச காட்சிகளும் இல்லை ஆனால் கொஞ்சம் அளவிற்கு அதிகமாக சாராயக்கடை காட்சிகள் முதல் பாதியில் இடம் பெற்றுள்ளது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்
படத்தின் கதை ஒன்றும் புதிய கதையில்லை பல படங்களில் வந்த கதையே தான்
ஒரு சண்டையால் சிறியதாக அடிபடும் அந்த ரத்தக்காயத்திற்காக மருத்துவமனை செல்லும் கதாயகனுக்கு வேறு ஒருவரது ரிப்போட்டை ஊழியர் கொடுக்க அவரது கொடிய வியாதி விஷ்னுக்கு இருப்பதாக டாக்டராக சிறப்பு தோற்றத்தில் வரும் விஐய் சேதுபதி சொல்லிவிடுகிறார்
கூடிய விரைவில் சாகப்போவதாக எண்ணிக்கொண்டு தனது சிறுநீரகத்தை தனது அக்கா திருமணத்திற்கு பணம் தேவைபடுவதால் விற்க திட்டம் போடுகிறார்
ஆனந்தராஜ் பாய்க்கு ஒரு சிறுநீரகம் தேவைபடுவதை அறிந்து அவரிடம் இருந்து 50 லட்சத்தை பெற்றுக்கொண்டு அவருக்கு தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார்
கடைசியில் மருத்துவமனையில் இருந்து உண்மை தெரிய வர பாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா இல்லையா அல்லது வேறு யாரோ கொடுத்தார்களா என்பதே மீதி கதை
படம் நிச்சயம் வெற்றிப்படம் விஷ்னுக்கு இது நிச்சயம் நல்ல லாபத்தை பெற்று தரும் அவ்வளவு தான்
அதை தாண்டி இந்தப்படத்தை பெரியதாக அலசி ஆராய வேண்டிய அவசியமில்லை அந்த அளவிற்கு சமூகத்திற்கு கருத்து சொல்ல இந்த படம் எடுக்கவில்லை
ஆனந்தராஜ் சார் படத்திற்கு மிக பிளஸ் பாயிண்ட் படத்தின் முக்கிய காமெடி நடிகர் சூரியை பல இடங்களில் வாரி சாப்பிட்டுள்ளார் ஆனந்தராஜ் சார் கடைசியில் பாடகராக வலம் வரும் மொட்டை ராஜேந்திரனின் பாடல்கள் எல்லாம் பிரமாதம்
இசை கேட்கும் ரகம் ஒளிப்பதிவு பார்க்கும் ரகம் வசனம் ரசிக்கும் ரகம் கதாநாயகி சைட் அடிக்கும் ரகம் கதாநாயகன் காமெடி ரசிக்கும் ரகம் வில்லன்கள் வாய்விட்டு சிரிக்கும் ரகம் மொத்தத்தில் படம் திரையரங்கம் போய் பார்க்கும் ரகம்
