கதாநாயகன் திரைவிமர்சனம் – திரையரங்கம் போய் பார்க்கும் ரகம் (3/5)
விஷ்னு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள கதாநாயகன் திரைப்படம் ஒரு காமெடி படம் முதல் பாதி பாதி காமெடி இரண்டாம் பாதி முழு காமெடி
வாரக்கடைசியில் குடும்பத்தோடு போய் சந்தோசமாக படம் பார்த்து ரசித்துவிட்டு வரலாம் குழந்தைகளோடு போய் பார்க்கலாம் பெரிசா எந்த ஆபாச காட்சிகளும் இல்லை ஆனால் கொஞ்சம் அளவிற்கு அதிகமாக சாராயக்கடை காட்சிகள் முதல் பாதியில் இடம் பெற்றுள்ளது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்
படத்தின் கதை ஒன்றும் புதிய கதையில்லை பல படங்களில் வந்த கதையே தான்
ஒரு சண்டையால் சிறியதாக அடிபடும் அந்த ரத்தக்காயத்திற்காக மருத்துவமனை செல்லும் கதாயகனுக்கு வேறு ஒருவரது ரிப்போட்டை ஊழியர் கொடுக்க அவரது கொடிய வியாதி விஷ்னுக்கு இருப்பதாக டாக்டராக சிறப்பு தோற்றத்தில் வரும் விஐய் சேதுபதி சொல்லிவிடுகிறார்
கூடிய விரைவில் சாகப்போவதாக எண்ணிக்கொண்டு தனது சிறுநீரகத்தை தனது அக்கா திருமணத்திற்கு பணம் தேவைபடுவத...

