Monday, December 6
Shadow

கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆத்மிகாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை அவ்வப்போது வந்து செல்கிறார்.

மற்ற நடிகர்கள் கனகச்சிதமாக அவர்களது கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். குறிப்பாக கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜா தன்னுடைய உருவத்தாலேயே பயமுறுத்தி படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அர்ஜூனின் பின்னணி இசை அசத்தல்.

படத்தின் பிளஸ்:

விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பு, என் எஸ் உதய குமாரின் ஒளிப்பதிவு, அர்ஜூனின் பின்னணி இசை, கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜா, இயக்குனர் கிருஷ்ணன் கதை களம் நடிகர்களை கையாண்ட விதம்

படத்தின் மைன்ஸ்:

நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள், படத்தின் வேகம்

மொத்தத்தில், கோடியில் ஒருவன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

CLOSE
CLOSE