
2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் சில படங்ககள் வெளியாகி ஹிட்டாகின. அதில் டாப் 5 படங்கள் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக அதிகளவில் வசூல் செய்து ஹிட்டான படங்களை வரிசைபடி, சினிமாபிளஸ் நேயர்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்…
விஸ்வாசம்: தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை தியேட்டர்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி தல அஜீத்தின் விஸ்வாசம் படம் இதுவரை 65 கோடிக்கு மேலாக தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் நேரடியாக மோதி வெளியான இந்த படம் பாகுபலி 2 மற்றும் சர்க்கார் படங்களில் வசூல்களை எட்டாமல் குறைந்த வசூல் வித்தியாசத்தில் வசூல் செய்துள்ளது. சர்க்கார் படத்தை விட அதிக வசூல் செய்துள்ளதாகவும், இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

பேட்ட: பேட்ட ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ரனிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிக்குமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பேட்ட படம், தமிழ்நாட்டில் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதலில் மெதுவாக வசூல் செய்ய தொடங்கிய இந்த படம், தற்போது வரை 52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
தடம்: மகிழ் திருமேணி இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தடம். அருண் விஜய் நடித்திருந்த இப்படம் முழுக்க முழுக்க கதையை மையமாக வைத்து வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு,வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தில்லுக்கு துட்டு2: சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தில்லுக்கு துட்டு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்த் படம் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கிறது
LKG- ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அறிமுகமான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியானது. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். இதில் பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்ததிருந்தனர். முழுக்க முழுக்க சமீபத்து அரசியலைக் கலாய்க்கும் வகையில் அமைந்து இருக்கும் இப்படத்தின் வசூல் படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் பெற்றுள்ளது. இந்த படம் ரூ. 16.5 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
