
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
