
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பவர் ஏ.எல்.விஜய் எப்பவுமே உணர்ச்சிபூர்வமான கதைகளை மிக சிறந்த திரைகதையில் கொடுத்து வெற்றி காண்பவர் அந்த வகையில் மேலும் ஒரு வெற்றி படைப்பு தான் lakshmi என்று சொல்லனும்.
டான்ஸ் என்ற ஒரு கருவை எடுத்து அதில் உள்ள தொலைக்காட்சி ஊழலை மற்றும் ஹிந்தியா தமிழா என்று ஒரு கத்தி போல கூர்மையான கதை எடுத்து யாரையும் புண்படுத்தாமல் தனது சிறந்த திரைகதை மூலம் ஒரு நல்ல டான்ஸ் படத்தை கொடுத்து இருக்கிறார் .
பிரபுதேவாவின் நட்பா இந்த கதை என்றும் சொல்லலாம் இல்லை பிரபுதேவா வருபுர்தலா என்று தோன்ற வைக்கும் படம் பிரபுதேவா படத்தின் பலம் அதேபோல லக்ஷ்மியாக நடித்து இருக்கும் பெண் பிரபுதேவாக்கு சரியான போட்டி என்று தான் சொல்லணும் நடன ரசிகர்களுக்கு மட்டுமா இந்த படம் என்று கேட்டால் இல்லை அனைவரும் பார்த்து ரசிக்ககூடிய படம் குறிப்பாக குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் சரி படத்தை பற்றி பார்ப்போம்
படத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ்,பேபி நித்யா சல்மான் யூசுப்,கோவை சரளா, கருணாகரன்,சாம் பால் சோபியா மாஸ்டர் அக்ஷத்,மாஸ்டர் ஜீத் தாஸ் மற்றும் பலர் நடிப்பில் சாம் C.S. இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் லக்ஷ்மி
கரு: நடனம் ஆடி ‘இந்தியாவின் பெருமை’ என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு
கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெருமை என்ற பட்டம் வழங்கும் நடனப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதே லக்ஷமியின் கனவு. ஆனால், லக்ஷமியின் தாய்க்கோ நடனமே பிடிக்காது. எனவே, லக்ஷமி தனது தாய்க்கு தெரியாமல் நடனப்பயிற்சி பள்ளி ஒன்றில் சேர்ந்து நடனம் கற்கிறாள். சென்னை டான்ஸ் அகாடமி நடத்தும் நடனப்போட்டியில் பங்கேற்கிறார். ஆனால், அதில்தோல்வியடைகிறார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்.
இந்த சமயத்தில் தான் பிரபுதேவா கதைக்குள் வருகிறார். இவர் லக்ஷமியினுடைய நடனக்குழுவுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் படி கேட்கிறார். பின்னர், அவரே லக்ஷமியின் நடன ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பயிற்சியாளராக மாறுகிறார். தொடர்ந்து, கடும் பயிற்சிக்குப் பின் பிரைட் ஆப் இந்தியா போட்டிக்கு லக்ஷமி செல்கிறார். அங்கு லக்ஷ்மி வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
பிரபுதேவா படம் என்றாலும் ஹீரோ என்று சொல்ல கூடியவர் பேபி நித்யா தான் படத்துக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் இவர் சிறந்த டான்சர் மட்டும் இல்லை மிக சிறந்த நடிகையும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் மிகவும் யதார்த்தமாக நடித்து உள்ளார் குறிப்பாக காமெடி செண்டிமெண்ட் இப்படி எல்லா பரிமாணங்களையும் மிகவும் அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.
பிரபுதேவா இவருக்கு வயது ஆக ஆக இளமை கூடிகொண்டே போகிறது என்று தான் சொல்லணும் வசீகரத்தில் மட்டும் இல்லை நடனத்திலும் அய்யோடா என்று பிரமிக்க வைக்கிறார் பதினாறு வயது பயன் போல கிட்ட தட்ட 48 வயதில் நடனம் ஆடுகிறார். lakshmi கதாபாத்திரத்துக்கு நடனம் சொல்லிகொடுக்கும் ஆசிரியாரக நடித்து உள்ளார் எப்போதும் போல சும்மா கிழி கிழின்னு பின்னி பெடல் எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் lakshmiக்கு அம்மா மற்றும் பிரபுதேவா முன்னால் காதலி என்று நடித்துள்ளார் பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் தன் பங்கை உணர்ந்து நடித்துள்ளார்
ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, திவ்யா பாண்டே, கோவைசரளா கருணாகரன், சாம்ஸ், உள்ளிட்ட பலர் மிக சிறப்பாக நடித்து உள்ளனர் இந்த படத்திற்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.பாடல்கள் அனைத்தும் பலம் நீரவ் ஷா ஒளிப்பதிவு படத்துக்கு மேலும் பலம் ஏபிசிடி திரைப்படத்துக்குப் பிறகு அதனினுடைய இரண்டாம் பாகம் என்று சொல்வது போல் லக்ஷ்மி திரைப்படம் நடனங்களால் மெருகேற்றப்பட்டுள்ளது.
மொத்தத்தில் லக்ஷ்மி திரைப்படம் நடன திருவிழா Rank 3.5/5
