
இவர் 1946 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். – வி. என். ஜானகி முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த மோகினி திரைப்படத்துக்கு கதை வசனம், பாடல்கள் எழுதினார்.
1953 ஆம் ஆண்டு மனிதனும் மிருகமும் என்ற திரைப்படத்தை கே. வேம்பு வுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, கே. சாரங்கபாணி, டி. ஆர். ராமச்சந்திரன் இத்திரைப்படத்தில் நடித்தனர்.
1962 ஆம் ஆண்டு இந்தியா – சீனா போரின் போது சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது என்ற ஆவணப்படத்தைத் தன் சொந்தச் செலவில் தயாரித்து வெளியிட்டார். தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உட்பட புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.
1979 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8-ந் திகதி சென்னை வானொலி விவித் பாரதியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிப்பதிவில் கலந்து கொண்டார். இதுவே இவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று ஒலிபரப்பானது.
1979 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10-ந் தேதி மாரடைப்பால் காலமானார்.
இவர் வசனம், பாடல்கள் எழுதிய திரைப்படங்கள்
மோகினி, லைலா மஜ்னு, கள்வனின் காதலி, மனிதனும் மிருகமும், விப்ர நாராயணா , சாரங்கதாரா, கப்பலோட்டிய தமிழன்
