
இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடும் SPB-பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’என்ற பாடலை பாடினார்.
ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’ பாடல்.
பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி’, `காதலன்’ இரண்டு, இன்றும் நினைவில் நிற்பவை ஆகும்.
எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். `சங்கராபரணம்’,` ரூத்ர வீணா’, `ஏக் துஜே கேலியே’, `மின்சாரக் கனவு’ என இவர் பாடியதெல்லாம் ஒலி பரப்பாகாத நாளே இல்லை என்று கூறலாம்.
எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு என்பது “ஏக் துஜே கேலியே’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியது தான்.
இதுவரை 42,000 பாடங்களுக்கு மேல் பாடியுள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடல்கள் பாடும் திறன் கொண்டவர்.
மூச்சுவிடாமல், `கேளடி கண்மனி’யில் `மண்ணில் இந்தக் காதல்’ `அமர்க்களம்’ பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை.
துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகமாகும்.
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
பெல்லண்டி நூரெல்ல பந்த
முகமது பின் துக்ளக்
பக்கிண்டி அம்மாயி
பாலூன்டு சதுரங்க
மல்லே பந்திரி
பாரத் 2000
திருகு பான
மனதில் உறுதி வேண்டும்
பிரேம
விவாஹ பூஜனம்பூ
கல்லு
கேளடி கண்மணி
பாலைவன ராகங்கள்
சிகரம்
தியாகு
குணா
பர்வதலு பானக்கலு
தலைவாசல்
பரதன்
திருடா திருடா
முதின மாவ
காதலன்
ராஜ ஹம்ச
பாட்டு பாடவா
துரோகி
காதல் தேசம்
மைனா
பவித்ர பந்தம்
அவ்வை சண்முகி
கண்டேன் சீதையை
தேவல்லு
பெல்லிவரமண்டி
பிரேன
உல்லாசம்
ரட்சகன்
மின்சார கனவு
பெரிய மனுஷன்
நந்தினி
சந்தர்ப
உய்யாலா
பெல்லடி ஜுப்பிஸ்டா
மாங்கல்யம் தந்துநானேநா
ஜாலி
ஃவைப் ஆப் வி. வரபிரசாத்
ஆரோ பிரனம்
தீர்க்க சுமங்கலி பவ
மெக்கானிக் மாவய்யா
பாடுடா தீயாக
பெத்த மனசுலு
மாயா
கோபிண்டி அல்லுடு
மனசு பத்தனு கன்னி
பிரியமானவளே
சிரிச்சலு
இந்தரா
பதரெல்ல அம்மாயி
ஏப்ரல் மாதத்தில்
மேஜிக் மேஜிக் 3D
ஃபூல்ஸ்
மகா ஏதபிதங்கி
மாயாபஜார்
ரூம்மேட்ஸ்
என் உயிரினும் மேலான
கல்யோனதவச
மல்லே பந்தரி
அஸ்ட்ரம்
கெத்தரி கென்னன்னே கெரபெகு
நாணயம்
சக்தி
தேவஸ்தானம்
மிதுனம்
திருடன் போலீஸ்
சந்திரா
மூணே மூணு வார்த்தை
மூடு முக்கலோ செப்பலண்டி
செய்தி – ஸ்ரீனிவாசன்
இசையமைத்த திரைப்படங்கள்
கன்னியா குமரி
சந்தர்ப
கேப்டன் கிருஷ்ணா
ரா ரா கிருஷ்ணய்யா
‘தூர்ப்பு வெள்ள ரயிலு
ஹம் பஞ்ச் (பின்னணி இசை)
ஒஹம்ம கத
சங்கீதா
துடிக்கும் கரங்கள்
உருண்ட சங்கரண்டி
பர்யாமணி
சீதாம்மா பெல்லி
பங்காரு சிலகா
புல்லெட்
தேவரல்லதனே
தூங்கல்லோ தூரா
ஜாக்கி
கொங்குமுடி
மயூரி
மயூரி
முத்துலா மனவரலு
பெடெ
மஹதீருடு
நாச்சி மயூரி (பின்னணி இசை)
பதமதி சந்திய ராகம்
சௌபாக்கியலட்சுமி
கௌதமி
லாயர் சுகாசினி
பிரதீமா
ராமு
சின்னூடு பெட்டூடு
கல்லு
நீக்கு நாக்கு பெல்லண்ட
ஓ பார்ய கத
பிரம்மயானம்
ரமண சமண
விவாஹ போஜனம்பூ
சித்தார்த்தா
உலகம் பிறந்தது எனக்காக (இணை இசை)
மகாயானம்
சிகரம்
தையல்காரன்
ஜெய்தர யாத்ரா
பெல்லியப்பா பனகாரப்பா
கிஸீர சஹார
ஊர்பஞ்சாயத்து
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்
முதின மாவ
உன்னை சரணடைந்தேன்
பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள்
காந்தி
ஆனந்த பைரவி
சத்யா
ஆதித்யா 369
அன்னமய்யா
அன்னமாச்சாரியா
அத்தடு
சிலம்டாக் மில்லியனர்
ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
நதி எங்கே போகிறது
சன்னல்
வானம்பாடி
பாடுதே தீயாக
பாடலானி உந்தி
என்டரு மஹனுபவலு
என்னோடு பாட்டுப் பாடுங்கள்
இதே தம்பி ஹாடுவேனு
இசைவானில் இளையநிலா, ஏர்டல் சூப்பர் சிங்கர்
