
அதிக பாடல் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்த S.P.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் இன்று அவரை பற்றிய சில அறியாத விஷயங்கள்
இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடும் SPB-பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’என்ற பாடலை பாடினார்.
ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’ பாடல்.
பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்த...