Monday, December 9
Shadow

கத்தி படத்திற்கும், விஜய் 62 படத்திற்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொல்கத்தா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அனல் பறக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க ஏ.ஆர்.முருதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம். அங்கு சுமார் 1 மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். முன்னதாக கத்தி படத்தின் ஓபனிங் சீன் கொல்கத்தாவில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விஜய்யின் ஓபனிங் சாங் சென்னையில் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.

Leave a Reply