Sunday, November 3
Shadow

கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

`தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

நேற்று முன்தினம் இந்த படத்திற்காக ரேக்ளா ரேஸ் நடப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் தென்காசி சென்று கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அங்கு ரேக்ளா ரேஸ் பார்க்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டிருக்கிறார் .

படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply