Monday, December 6
Shadow

கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாள் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

இவர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ (1982), ‘முதல் மரியாதை’ (1985), ‘புன்னகை மன்னன்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புதிய முகம்’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1994), ‘காதலன்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘டூயட்’ (1994), ‘முத்து’ (1995), ‘இந்திரா’ (1995), ‘பாட்ஷா’ (1995), ‘இந்தியன்’ (1996), ‘இருவர்’ (1997), ‘நிலாவே வா’ (1998), ‘காதல் மன்னன்’ (1998), ‘ஜீன்ஸ்’ (1998), ‘துள்ளாத மனமும் துள்ளும்’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆடுகளம்’ (1999), ‘முதல்வன்’ (1999), ‘படையப்பா’ (1999), ‘சங்கமம்’ (1999), ‘ஜோடி’ (1999), ‘குஷி’ (2000), ‘ரிதம்’ (2000), ‘ஆளவந்தான்’ (2000), ‘முகவரி’ (2000), ‘அலைபாயுதே’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘பார்த்தேன் ரசித்தேன்’ (2000), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘மஜ்னு’ (2001), ‘ஷாஜகான்’ (2001), ‘சிடிசன்’ (2001), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘வில்லன்’ (2002), ‘ஜெமினி’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘இயற்கை’ (2003), ‘செல்லமே’ (2004), ‘அட்டஹாசம்’ (2004), ‘ஆயுத எழுத்து’ (2004), ‘வசூல் ராஜா MBBS’ (2004), ‘உள்ளம் கேட்குமே’ (2005), ‘வரலாறு (2006), ‘அந்நியன்’ (2006), ‘சிவாஜி: தி பாஸ்’ (2007), ‘மொழி’ (2007), ‘குரு’ (2007), ‘தசாவதாரம்’ (2008), ‘அசல்’ (2009), ‘மோதி விளையாடு’ (2009), ‘சிவப்பு மழை’ (2009), ‘ஆனந்த தாண்டவம்’ (2009), ‘அயன் (2009)’, ‘எந்திரன் (2010)’, ‘ராவணன்’ (2010), ‘வாகை சூட வா’ (2011), ‘யமுனா’ (2012), ‘நீர்ப்பறவை’ (2012), மற்றும் ‘கடல்’ (2013).
அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும், ‘பூங்காற்று திரும்புமா’ – ‘முதல் மரியாதை’ (1985), ‘சின்ன சின்ன ஆசை’ – ‘ரோஜா’ (1993), ‘போறாளே பொன்னுத்தாயி’ – ‘கருத்தம்மா’ (1995), ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ – ‘சங்கமம்’ (2000), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) மற்றும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ – ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) போன்ற பாடல்கள் அவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும் புகழையும் தேடித்தந்தது.

CLOSE
CLOSE