Wednesday, October 28
Shadow

தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார்.
பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு ,க ஸ்டாலின் நெகிழ்ச்சி.

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின்,
உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது
“தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

“ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சுட்டப்பா ”

பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி தனது ஓவியப்புத்தகத்தை பரிசளித்த நடிகர் சிவக்குமார்.

சமீபத்தில் பரியேறும் பெருமாள் படம் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள் இன்று படம் பார்த்த நடிகர் சிவக்குமார் இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். சமூகத்துக்கு அவசியமான படம் எடுத்திருக்கிறீர்கள், ஒவ்வொருவரும் மனசுக்குள்ளும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள். சில காட்சிகளில் கலங்க வைத்துவிட்டீர்கள். என்று பாராட்டி தான் வரைந்த ஓவிய புத்தகத்தை பரிசளித்தார் நடிகர் சிவக்குமார்.