Thursday, December 8
Shadow

மஹா திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் , நடிகர்கள் ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மஹா திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா.

படம் தொடங்கும் போதே ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு காதல் மற்றும் ரொமான்சுடன் கிளுகிளுப்பாக தொடங்குகிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு என்ற கார்டுடன் படம் ஆரம்பாகிறது. அதில் ஒரு கொடூர சைக்கோ கொலைகாரன் குழந்தைகளை கடத்தி கொலை செய்கிறான். இந்த கொலைகாரன் கண்ணில் ஹன்சிகாவின் குழந்தை பட, அந்த குழந்தையையும் கடத்தி விடுகிறான். அவனிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

முதல் முதலாக அம்மா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். குழந்தையை தேடி அங்கும் இங்கும் அலையும் ஹன்சிகாவின் நடிப்பு முதல் பாதியில் வேறலெவலில் உள்ளது. மேலும், இடைவெளி பிளாக் ட்விஸ்ட்யும் பக்காவாக அமைந்துள்ளது. ஹன்சிகாவுக்கு சிறப்பான ஐம்பதாவது படமாக ‘மஹா’ திரைப்படம் அமைந்துள்ளது. அவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஹன்சிகா மற்றும் சிம்பு வரும் காட்சிகள், அவர்களின் ரொமான்ஸ் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. ஹன்சிகாவும் சிம்புவும் காதலிக்கும் போது எடுக்கப்பட்ட படம் எடுக்கப்பட்டால் இருவரும் வரும் காட்சி ரசிக்கும் படி உள்ளது. அதேபோல போலீஸாக வரும் ஸ்ரீகாந்தின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது.

படத்தில் சிம்பு வரும் காட்சி குறைவாகவே உள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. சிம்பு 40 நிமிடம் வருவார் என்று கூறப்பட்ட நிலையில் சிம்பு முதல் பாதியில் 10நிமிடமும், பிளாஸ் பேக்கில் 10 நிமிடம் மட்டுமே வருகிறார். மேலும் சிம்புக்கு என்ன ஆனது அவர் என்ன ஆனார் என மேலோட்டமாக சொல்லி இருப்பது படத்திற்கு மைனசாக அமைத்துவிட்டது. இதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் படத்தின் கதைக்கு ஓர் கிரிப்பாக இருந்து இருக்கும். ஆனால் அங்கு கோட்டைவிட்டுள்ளார்கள்.

படத்தின் பிளஸ்:
ஹன்சிகாவின் நடிப்பு, போலீஸாக வரும் ஸ்ரீகாந்தின் நடிப்பு, ஜிப்ரானின் இசை

படத்தின் மைன்ஸ்:
சிம்பு வரும் காட்சி குறைவாகவே இருப்பது

மொத்தத்தில் மஹா குடும்பத்தோடு அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்.