Tuesday, April 28
Shadow

பொன்னியின் செல்வனில் வில்லியாக நடிக்கும் உலக அழகி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா புரொடக்‌ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் சுந்தர சோழராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார். பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் வில்லியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் குந்தவை நாச்சியாராக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன