கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மரகதநாணயம் இந்த படத்தில் ஆதி நிக்கி கல்ராணி ராமதாஸ் ஆனந்த் ராஜ் அருண்ராஜா காமராஜ் டேனியல் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பிரமானந்தம் M.S.பாஸ்கர் மைம் கோபி முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் அக்சஸ் பிலிம் சார்பில் தயாரிக்கும் படம் இந்த படத்துக்கு இசை தியு நைணன் தாமஸ் ஒளிப்பதிவு P.V.ஷங்கர் இயக்கம் அறிமுக இயக்குனர் A.R.K.சரவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் படு விமர்சியாக நேற்று சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது இதில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் . குறிப்பாக வேலைக்காரன் படபிடிப்பில் படு பிஸியாக இருந்தாலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.
“இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள படும் திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள்.
அந்த வகையில் இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இந்த படத்தின் கதையை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் மிக அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். எங்கள் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறினார் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு.
“‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள்.
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தான் விஜய் டிவியில் நிகழ்சிகள் பண்ணும் போது குறிப்பாக கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கலந்து இரு சுற்றில் வெற்றி பெற்ற ருபாய் ஐந்து லட்சம் பணத்தை ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவுக்கு கொடுத்தேன் என்பதை பகிர்ந்தார் .