அஜித் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் எல் ஆகின்றன இதனால் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏக்கம் ஒரு பக்கம் வருத்தம் நம்ம தலை படம் எப்ப ரிலீஸ் என்று இந்த நிலையில் விவேகம் படம் முதலில் ரிலீஸ் ஏப்ரல் என்று கூறினார்கள். பின்னர் அது ஜூன் போகி இப்ப கடைசியாக இப்ப ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என்று உறுதி செய்யப்பட்டு வேலைகள் மிக வேகமாக நடந்து கொண்டு இருக்கு இந்த சுழ்நிலையில் ரசிகர்களுக்கும் தயாரிப்பளர்களுக்கும் மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு விலை பேசபடுகிறது. என்று செய்திகள் கசிந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு.
‘விவேகம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்புக்கு இடையே இறுதிகட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.