Monday, June 22
Shadow

பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

உலக சினிமாவை நம் பக்கம் திரும்ப வைத்த படம் என்றால் அதில் ஒரு பங்கு பாகுபலி படத்துக்கும் உண்டு என்று தான் சொல்லணும் இந்த படம் தான் இந்திய சினிமாவிலே அதிக செலவில் மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட படம் இந்த படத்தின் வியாபாரத்தை பற்றியும் சிறுதும் கவலை படமால் மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படம் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வசூலை அள்ளி கொடுத்தது இது ஒரு மொழி மட்டும் இல்லாமல் ரிலீஸ் ஆன எல்லா மொழிக்ழ்ளிலும் ஏன் உலக அளவில் மிக பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகது இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்ப எப்ப என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் விருந்து இன்றி நமக்கு கிடைத்துள்ளது . ஆம் இந்த படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது . இதை பற்றி கோசம் பார்க்கலாம் வாங்க

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் இன்று வெளியானது.

இதில் பாகுபலி 2 எப்படி இருக்கும் என்பதற்கான அத்தனை விஷயங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணை கவரும் விஷுவல்ஸ் மட்டுமல்லாது பின்னணி இசையும் சேர்த்து மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்துள்ளது.

இதில் சில ஆச்சர்ய ஷாட்களும் அடங்கியுள்ளது:

1. “நீங்கள் என்னுடன் இருக்கும்வரை என்னை யாராலும் அழிக்கமுடியாது மாமா” என பாகுபலி கட்டப்பாவிடம் சொல்கிறார். ஆனால் இறுதியில் சத்யராஜ்தான் பாகுபலியை கொள்கிறார்.

2. பாகுபலியை முதுகில் குத்தும் கட்டப்பா அதன்பின் அவரிடம் அதற்கான காரணத்தை சொல்லும் காட்சியும் இடம்பெறுகிறது.

3. பாகுபலியை கொன்ற பிறகு அவருடைய மகன் காலைத் தொட்டு கட்டப்பா பாவ மன்னிப்பு கேட்பது போன்ற காட்சியும் உண்டு.

4. நாடே கயவர்களால் எறிந்துக் கொண்டிருக்கும்போது எப்படியாவது பாகுபலியின் மகனை மட்டும் காப்பாற்றவேண்டும் என போராடுகிறார் சிவகாமி. இதுதான் பாகுபலி முதல் பாகத்தின் முதல் காட்சி.

5. ஏற்கனவே பாகுபலி மீது பல்வாள்தேவனுக்கு இருக்கும் கோபம் அனுஷ்கா வாயிலாக இன்னும் அதிகரிக்கிறது. சொல்லப்போனால் அனுஷ்கா – பிரபாஸ் காதல்தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாக வருகிறது.

6. முதல் பாகத்தில் தமன்னாவின் டாப் லெஸ் பேசப்பட்டது போல் இதில் அனுஷ்கா – பிரபாஸின் லிப்லாக் பேசப்படும் என எதிர்பார்கலாம்.

7. மேலும் முதல் பாகத்தை மிஞ்சும் போர் காட்சி இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸில் இருக்கும் எனவும் உறுதியாக நம்பலாம்.

Leave a Reply