Friday, November 6
Shadow

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

சமையல் போட்டியில் பிரபலங்களுக்கு சவால் விடுக்க தயாராகும் சர்வதேச செஃப்!

சென்னை: சமையலின் சுவையையும், பிரபலங்களின் திறமையையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுப்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான செஃப் சாஷி செலியா நிகழ்ச்சியின் நடுவராக இணைந்துள்ளார்.

‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் வென்ற செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனது தொழில் வாழ்க்கையை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பாதையை மாற்றிக் கொண்டார். அந்த ஆர்வமும், திறமையும் அவரை ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ போட்டியின் வெற்றியாளராக உயர்த்தியது.

சாஷி செலியாவின் சமையலில் அவரது சிறுவயது நினைவுகளும், இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு கலாச்சாரத்தின் தாக்கமும் முக்கிய இடம் பெற்றுள்ளன. பல்வேறு கலாச்சாரங்களின் சுவைகளை ஒன்றிணைத்து தனக்கென ஒரு சமையல் அடையாளத்தை உருவாக்கியுள்ள அவர், உணவு என்பது வெறும் சுவைக்கான விஷயம் மட்டுமல்ல; அது நமது வாழ்க்கை, நினைவுகள் மற்றும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு வழி என நம்புகிறார்.

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணைவது குறித்து செஃப் சாஷி செலியா கூறியதாவது:

“மாஸ்டர்செஃப் சமையலறையை நோக்கிய எனது பயணம் முற்றிலும் எதிர்பாராதது. சிங்கப்பூர் காவல்துறையில் எனது பணியைத் தொடங்கிய நான், ஒருநாள் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சமையலறைக்குள் நுழைந்து, அந்தப் போட்டியின் கோப்பையை வெல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

எனது சிறுவயதையும், சமையல் அடையாளத்தையும் உருவாக்கிய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு சுவைகள், எனது பயணத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தன. நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்பதை உணவின் மூலமாகவும் சொல்ல முடியும் என்பதை இந்தப் பயணம் எனக்கு கற்றுக் கொடுத்தது.

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணைவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். ஏனெனில் ஒரு போட்டியாளராக மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் நின்ற அனுபவம் எனக்கு இருக்கிறது. பதற்றம், அழுத்தம், நிச்சயமற்ற நிலை என அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன். அதே நேரத்தில், நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு உணவை உருவாக்கும்போது கிடைக்கும் உற்சாகத்தையும் நன்கு அறிந்திருக்கிறேன்.

இந்த முறை சமையலறையின் மறுபுறத்தில் இருந்து அந்த அனுபவத்தைப் பார்க்கப் போகிறேன். பிரபல போட்டியாளர்களைச் சந்தித்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு, அவர்களின் எல்லைகளைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்ளச் செய்வதையும், அவர்கள் சமையலறைக்கு கொண்டு வரும் தனித்துவமான கதைகள் மற்றும் சுவைகளைக் கண்டறிவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”

சமையல் போட்டி என்ற எல்லையைத் தாண்டி, பிரபலங்களின் தனிப்பட்ட விருப்பங்கள், சமையல் திறமை, போட்டி மனப்பான்மை, அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதம் என பல்வேறு அம்சங்களையும் வெளிப்படுத்தும் வகையில் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி உருவாகியுள்ளது.

ஒருபுறம் சர்வதேச அனுபவம் கொண்ட செஃப் சாஷி செலியாவின் மதிப்பீடுகள், மறுபுறம் நடிகை சமந்தா ரூத் பிரபுவின் தொகுப்பு என, உணவு, பொழுதுபோக்கு மற்றும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ ரசிகர்களை கவர தயாராகி வருகிறது.

சுவையான உணவுகள்… சுவாரஸ்யமான போட்டிகள்… பிரபலங்களின் எதிர்பாராத சமையல் திறமைகள்… என ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் உங்கள் இல்லம் தேடி வரவுள்ளது!

MasterChef Australia Winner Chef Sashi Cheliah Joins Celebrity MasterChef Tamil as Judge

Internationally acclaimed chef set to challenge celebrities in the Tamil edition of the popular culinary show

Chennai: Get ready for a delicious mix of food, entertainment and celebrity competition as Celebrity MasterChef Tamil gears up to make its way to audiences. Presented by Sony VIZHA and Sony LIV, the show will bring together popular celebrities under one roof, with actress Samantha Ruth Prabhu hosting the exciting culinary competition. Adding an international flavour to the show, MasterChef Australia winner Chef Sashi Cheliah has joined the Tamil edition as a judge.

Chef Sashi Cheliah’s journey to the MasterChef kitchen has been anything but conventional. He began his professional career with the Singapore Police Force before following his passion for cooking and stepping into the world of culinary arts. His talent and determination eventually led him to compete in MasterChef Australia, where he emerged as the winner and lifted the coveted title.

Sashi’s culinary identity has been deeply influenced by the Indian and Southeast Asian flavours that were an integral part of his childhood. His cooking beautifully reflects these influences, while also highlighting his belief that food can be a powerful way of expressing our identity, memories and cultural roots.

Speaking about joining Celebrity MasterChef Tamil as a judge, Chef Sashi Cheliah said:

“My journey towards the MasterChef kitchen was completely unexpected. I started my career with the Singapore Police Force and never imagined that one day I would step into the MasterChef Australia kitchen and eventually win the competition.

The Indian and Southeast Asian flavours that shaped my childhood and culinary identity became an important part of that journey. It made me realise that food can tell stories about who we are and where we come from.

Joining Celebrity MasterChef Tamil as a judge is a very special moment for me. I know exactly what it feels like to stand on the other side of the kitchen as a contestant — the nerves, the pressure and the uncertainty. At the same time, I have also experienced the excitement of creating a dish that makes you proud.

This time, I will be experiencing that journey from the other side of the kitchen. I am looking forward to meeting the celebrity contestants, pushing them beyond their comfort zones and discovering the stories and flavours they bring into the kitchen.”

Celebrity MasterChef Tamil promises to go beyond being just a cooking competition. Along with showcasing the culinary skills of popular celebrities, the show is set to capture their competitive spirit, creativity, ability to handle pressure and willingness to experiment with food.

With Chef Sashi Cheliah bringing his international MasterChef experience to the judging panel and Samantha Ruth Prabhu taking charge as the host, the show is set to offer a flavourful combination of food, entertainment, competition and unexpected moments.

Delicious dishes, exciting challenges and the untapped culinary talents of celebrities — Celebrity MasterChef Tamil is all set to bring a whole new flavour of entertainment to audiences soon.