
சென்னை அருகே உள்ள சாய் ராம் பொறியல் கல்லூரி வளாகத்தில் மாற்றம் என்ற அறகட்டளை சார்பாக நடந்த சங்கமம் 2.0 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அப்போது கமல்ஹாசன் மாணவர்களிடம் பேசிய சில உக்கிய விஷயங்களை பார்க்கலாம்
நான் இங்கு தலைவனாக வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். மாணவர்கள் மத்தியில்தான் அதிக தைரியத்துடன் பேச முடிகிறது.
நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். சும்மா இருங்கள், எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா? அன்பே சிவம், தேவர்மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது.பத்மாவத் படத்தின் பெயரால் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்டது. குழந்தைகள் எப்படி வளர நினைக்கிறார்களோ அவர்களை அப்படி வளரவிட வேண்டும். மாற்றத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும். குறைகளை கண்டறிந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள். நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான். எனவே, மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வகையில் காந்திதான் எனக்கு பிடித்த தலைவர் காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதியும் எனக்கு பிடித்த தலைவர்கள்தான். தற்போதைய அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஏழ்மையை மட்டுமே நீக்குகின்றனர், பொதுமக்களின் ஏழ்மையை கண்டு கொள்வதில்லை. ஜாதி, மதம், இனத்தால் மக்களை பிரிப்பது தவறு. வெற்றி, தோல்வி என்று பாராமல் தொடர்ந்து முன்னேற வேண்டும். மக்களின் வாக்குகள் வியாபாரத்திற்கு அல்ல.
