Sunday, June 21
Shadow

கார் விபத்தில் சிக்கிய நடிகர் நானி

தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் ‘வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘MCA’ எனும் தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மெர்லபாக காந்தி இயக்கும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நானி பயணித்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்தானது. சிறு காயங்களுடன் நானியும், அவரது டிரைவரும் உயிர் தப்பினராம். இது குறித்து நானி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரம் பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply