Saturday, June 27
Shadow

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிக்கும் “ மயூரன் “

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் படம் ‘மயூரன்’. இந்த படத்தில் பெரியவர் கேரக்டரில் (வேலாராமமூர்த்தி), சேகு கேரடரில் (அஞ்சன்), ஆனந்த்சாமி கேரக்டரில் ஜான், விஜி ( எ ) டோக்லி கேரக்டரில் அமுதவாணன், ஸ்வேதாவாக அஸ்மிதா, கைலாஷ் , சாஷி , பாலாஜிராதாகிருஷ்ணன்,, ரமேஷ்குமார், கலை போன்றவர்கள் நடித்துள்ளனர். வேலு மற்றும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒளிப் ஒளிப்பதிவு பணிகளை பரமேஷ்வர் செய்து வருகிறார். இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது, ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும் படத்திற்கு இசையமைத்துள்ளனர். குகை மா.புகழேந்தி பாடல்களை எழுதியுள்ளார். எடிட்டிங் பணிகளை அஸ்வின், கலை பணிகளை M.பிரகாஷ், சண்டை பயிற்சி டான்அசோக், நடனத்தை ஜாய்மதி ஆகியோர் செய்துள்ளனர். K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை நந்தன் சுப்பராயன் செய்துள்ளார். இவர் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.