Thursday, April 18
Shadow

தொடரும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனை – பட்டியல் இதோ!

மெர்சல் ரிலீஸ்க்கு முன்னாடியும் பிரச்சனை ரிலீஸ் ஆனதும் பிரச்சனை ஒரு படத்துக்கு ஏன் இந்த இரண்டு அரசாங்கமும் தொடர்ந்து பிரச்சனைகள் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை இது தொடர்ந்து விஜய் படத்துக்கு வரும் சோதனையாக ஆகிவிட்டது படம் வெளியாகி வசூலில் சாதனை ஒரு பக்கம் இருக்க இந்த பி.ஜே.பி. அரசாங்கதால பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது மெர்சல் படம்

படத்தில் வரும் GSTவசனங்களை வெட்டி எடுக்கவில்லை என்றால் படத்துக்கு ஆபத்து மட்டும் இல்லை விஜய்க்கும் ஆபத்து என்று மிரட்டுவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் இதையும் மீறி படம் வசூலில் மிக பெரிய சாதனை புரிந்துவருகிறது அதை நாம் பாப்போம்

ஆரம்பத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்த ‘மெர்சல்’ ரிலிஸின் நெருக்கத்தில் பல சோதனைகளை சந்தித்தது. அனைத்து சோதனைகளையும் கடந்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, ஆந்திரா என பக்கத்து மாநிலங்களிலும் வசூலில் சாதனை படைத்து வரும் மெர்சல் குறித்த சில சிறப்பு தகவல்கள் இதோ:

திண்டுக்கல் சிட்டியில் மட்டும் முதல் நாள் ரூ 36 லட்சத்தை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களில் இது தான் அதிக வசூல் என சினிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட ஆற்காடு, தென் ஆற்காடு என இதுவரை இல்லாத அளவில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.

மதுரையில் மட்டும் முதல் நாள் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் மெர்சல் நிலவரம்

அமெரிக்காவில் #USA $ 474,131 * 3.08 cr
லண்டனில் #UK £ 94,311 * 81 L
மலேசியாவில் #MYR 586,665 * 90.3 L
ஆஸ்திரேலியாவில் #Aus A$ 133,057 * 68 L
ஃபிரான்ஸில் €87,000 * 66.08 L (4700 பேர்)
லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சில இடங்களில் ஆல் டைம் ரெக்கார்ட் ஒன் டே சாதனை செய்துள்ளது.

மேலும், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன் லால் நடித்த புலிமுருகன், மம்முட்டி நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் ’மெர்சல்’ முறியடித்துள்ளது.

Leave a Reply