Wednesday, October 28
Shadow

வெளிநாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை புரிந்த விஜயின் மெர்சல்

விஜயின் மெர்சல் படம் தமிழ் நாடு மட்டும் இல்லை வெளிநாடுகளிலும் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது ஒரு சிலர் சில கட்சியின் எதிர்ப்பு அலை இந்த படத்துக்கு சாதகமாக அமைந்து இலவச விளம்பரமே படம் இக பெரிய வசூல் சாதனை என்று சொல்லி வந்தனர் அவர்களுக்கு பதில் அளிக்கும் அளவில் இந்த படம் பிற நாடுகளில் வசூல் சாதனை புரிந்துள்ளது அதோடு தமிழகத்திலும் மிக பெரிய வசூல் நிகழ்த்தியுள்ளது.

விஜய்யின் மெர்சல் படம் தான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. தீபாவளிக்கு வெளியான இப்படம் சென்னையில் 10 நாட்களில் ரூ. 9.61 கோடி வரை வசூலித்திருக்கிறது.

வடக்கு அமெரிக்கா, UK, பிரான்ஸ், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்படம் அமோகமான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் வெளிநாட்டில் மெர்சல் 3வது இடத்தை பிடித்துள்ளதாம்.

இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் மெர்சல் பட எமோஜி நேற்றோடு முடிவடைந்துவிட்டதால் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply