
மெர்சல் இன்று விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகவும் பரபரப்புடன் இருக்கிறார்கள். காரணம் திரையரங்க ஸ்ட்ரைக் மற்றும் டைட்டில் பிரச்சனை காரணாமாக ஆனால் உங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கிறது விஜய் ரசிகர்கள் அதை ஏற்றுகொள்ள தயாரா மெர்சல் பண்ண ரெடியா
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் அதனுடைய 100-வது படமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.

தளபதி விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பட டைட்டில் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்குமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் வரும் வெள்ளியன்று மெர்சல் பற்றி மகிழ்ச்சி செய்தி வரும் என கூறியுள்ளார்.
இது படத்தின் தலைப்பு மாற்றமா? அல்லது ட்ரைலர் வெளியீடு குறித்த தகவலா? என்பதை வெள்ளியன்று வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
