Thursday, March 27
Shadow

விஜய்யின் மெர்சல் பாடல் காட்சி வீடியோ இணையதளங்களில் கசிந்தது

இன்று தமிழ் சினிமாவையே மெர்சல் பண்ணுவது நம்ம இளைய தளபதி விஜய் தான் என்று சொல்லணும் காரணம் மெர்சல் முதல் பார்வை வெளியானதில் இருந்து இதே பேச்சு தான் இணையதளங்களை பார்த்தாலே மெர்சல் போஸ்டர் விஜய் பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பது இல்லை அது போல இப்ப வந்த நியூஸ் கொஞ்சம் சோகம் தான் வாங்க என்னவென்று பாப்போம் .

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் 3 வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

சில தினங்களுக்கு முன் டீசர், போஸ்டர் ரிலீஸாகி ரசிகர்களை குஷியாக்கியது. சமீபத்தில் கூட மருத்துவனாக வரும் மாறன் தான் விஜய்யின் மூன்றாவது கேரக்டர் என தகவல்கள் சுற்றியது.
தற்போது இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ இணையதளத்தில் லீக்காகியுள்ளது. இதில் விஜய் பனியன் அணிந்து நடனமாடுவது போல உள்ளது.

அநேகமாக இதில் ஆடுபவர் ஜல்லிக்கட்டு விஜய் ஆக இருக்குமோ என தோன்றுகிறது.

Leave a Reply