
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது
வசூலில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்து திரையிடப்பட்டது. மேலும் பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் விருதையும் தட்டிச் சென்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மொத்தமாக 350 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்ததாக சோனி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆளப்போறான் தமிழன் பாடல் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதை #100MForAalaporaanThamizhan என்ற ஹேஸ்டேக் உருவாக்கி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி உள்ளனர். தற்போது வரை இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் 3-வது இடம் பிடித்துள்ளது.

?The song Single Teaser
⚫Released – 09-08-17
⚫Likes – 200k
⚫Views – 5.3M
?The Lyrics Video
⚫Released – 11-08-17
⚫Likes -458k
⚫Views -43.9M
?The Video Song
⚫Released – 17-11-2017
⚫Likes – 582k
⚫Views – 100M
