
கடந்த வாரமே மெர்சல் டீசர் வெளியாகவிருந்தது. ஆனால், மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தால் தமிழ்நாடே போரட்டக்களமாக மாறியது. இந்த சூழ்நிலையில், டீசறை வெளியிட வேண்டாம் என்று விஜய் கூறியதால் டீசர் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்தது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில். விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார். டீசர் விரைவில் வெளியாகும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமா ருக்மணி அவ்வப்போது ட்விட்டரில் அறிவித்து வந்தார்.
இந்நிலையில், அட்லீ பிறந்த நாளான இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
பொறுமையை இழந்த , விஜய் ரசிகர்களோ தாங்களே ஒரு அனிமேஷன் டீசறை வெளியிட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இனியுமாவது படகுழுவும் விஜயும் டீசர் வெளியிட முடிவு செய்வார்களா என்று பொருத்து இருந்து பார்க்கணும்
