Sunday, April 26
Shadow

இளம் எழுத்தாளர்களுக்கு புதிய வாசல் திறக்கும் ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ – எழுத்துலகில் புதிய அலை!

இளம் எழுத்தாளர்களுக்கு புதிய வாசல் திறக்கும் ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ – எழுத்துலகில் புதிய அலை!

சென்னை, ஏப்ரல் 13, 2026:
திரைத்துறையில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்திய அனுபவத்துடன், தற்போது எழுத்துலகிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான புதிய முயற்சியாக ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலக அளவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பதிப்பகம், அவர்களின் சிந்தனைகளை புத்தகங்களாக மட்டுமல்லாது, எதிர்காலத்தில் திரைப்படம் மற்றும் பிற காட்சி ஊடகங்களுக்கான வலுவான கதைக்களங்களாக மாற்றும் இலக்கையும் முன்வைத்துள்ளது.

நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஒரு வலுவான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வழிகாட்டுதலின் கீழ் அனுபவமிக்க நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் குழு விவரம்:

  • பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன்
  • துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன்
  • முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா
  • தலைமை வடிவமைப்பாளர்: திருமதி. ரேவதி

இலக்கிய உலகில் புதுமை மற்றும் தரத்தை முன்னிறுத்தும் இந்த முயற்சி, புதிய எழுத்தாளர்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியமான மேடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தனது இந்த இலக்கியப் பயணத்திற்கு வாசகர்கள் மற்றும் படைப்பாளர்களின் ஆதரவை எதிர்நோக்கி உள்ளது.