
பிரதியுஷா பவுண்டேசன் மூலம் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சமந்தா, தெலுங்கானா அரசின் கைத்தறி ஆடை தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு, கைத்தறி நெசவாளர்களின நிலையை சொல்லி, அவர்களின் வாழ்வியலுக்காக கைத்தறி விளம்பர தூதராக இலவசமாக நான் செயல்படுகிறேன் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.
எல்லா நடிகர் நடிகைகளும் போலவே இதற்காக சமந்தா பெரும் தொகையை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டிஆர்., அதுபற்றி நேற்று கூறுகையில், இந்த பணிக்காக சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று தெரிவித்து, சமந்தா பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.