Monday, July 27
Shadow

‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

முதல்பட இயக்குநர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், தற்போது படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்த இயக்குநர் ராஜா கருப்பசாமியின் அர்ப்பணிப்பையும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பையும் பாராட்டியுள்ளனர். முதல் படமாக இருந்தாலும், அனுபவம் மிக்க இயக்குநரின் முதிர்ச்சியுடன் அவர் பணியாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமியும், தனது கதையை நம்பி முழு படைப்புச் சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரின் பங்களிப்பே இந்த வெற்றிகரமான படப்பிடிப்பு நிறைவுக்கு காரணம் என கூறியுள்ளார். தற்போது பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வர ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை சுரேந்திரன் பரஞ்சோதி கவனித்துள்ளார். படத்தொகுப்பை அசோக் அர்ஜுனன் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை பரத் சங்கர் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கத்தை ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பை வியாகி மேற்கொண்டுள்ளனர்.

பின்னணிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கான தயாரிப்புகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Mithri Movie Makers’ ‘Modha Raathiri’ Wraps Up Shooting; Post-Production Begins in Full Swing

Chennai: Modha Raathiri, the upcoming Tamil film produced by the acclaimed production house Mythri Movie Makers, has officially completed its principal photography. With filming now wrapped, the team has shifted its focus to post-production, marking a major milestone in the film’s journey toward release.

Directed by debutant Raja Karuppasamy, the film stars Rishikanth and Anishma Anilkumar in the lead roles. Since its announcement, Modha Raathiri has generated considerable curiosity among audiences, particularly as it comes from Mythri Movie Makers, a banner known for delivering several successful pan-Indian blockbusters.

Announcing the completion of the shoot, producers Naveen Yerneni and Y. Ravi Shankar praised the dedication of the entire team. They noted that completing a film within the planned schedule is the result of discipline, teamwork, and commitment from everyone involved. The producers also lauded director Raja Karuppasamy for handling his debut project with the confidence and maturity of an experienced filmmaker, appreciating his unwavering focus on the screenplay and his commitment throughout the production.

Sharing his thoughts on the occasion, director Raja Karuppasamy expressed his happiness over completing the shoot successfully. He thanked the producers for believing in his story and giving him complete creative freedom at every stage of the filmmaking process. He also extended his gratitude to the cast, technicians, and every member of the crew for their relentless support and hard work. According to the director, post-production work is progressing at full pace, and the team is eager to bring the film to audiences as soon as possible.

Apart from the lead pair, the film features an ensemble cast including Chethan, A. Venkatesh, Bucks, Abdul Lee, Shelly Kishore, Sangeetha Balan, Bhanupriya, Sumithra Devi L., Varshini Karmegam, Karthikeyan, Velan, Kaushik Kapilan, and several others.

The technical crew includes cinematographer Surendran Paranjothi, editor Ashok Arjunan, music composer Bharath Shankar, costume designer Poornima Ramasamy, production designer A. Balumahendra, and publicity designer Viyaki.

With post-production progressing rapidly, the makers are also gearing up for the film’s promotional campaign. Official announcements regarding the audio launch, trailer release, and worldwide theatrical release date are expected to be revealed soon.