Saturday, November 7
Shadow

Tag: Rishikanth

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது – நடிகர் ரிஷிகாந்த் சென்னை: நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாரத்தி’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விழாவில் பேசிய அவர், படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரிஷிகாந்த், ‘டாரத்தி’ படத்தின் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் காத்தியன் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சினிமா துறைக்குள் வர வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் காத்தியனும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார். படத்திற்கான தயாரிப்புப் பணிகளின்போது மதுரையில் தங்கி, அங்குள்ள வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு கதாபாத்திரத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் ரிஷிகாந்த் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி பயிற்சிகள் நடைப...
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ

Latest News, Top Highlights
“கவுண்டமணி சாயலில் காமெடி… வில்லத்தனத்திலும் ஒரு ரசனை!” – நடிகர் அப்துல் லீ சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அப்துல் லீ. யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்களில் தொடங்கிய இவரது நடிப்பு பயணம், தற்போது வெள்ளித்திரை மற்றும் இணையத்தொடர்கள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அப்துல் லீ, தன்னுடைய நடிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக இருப்பவர்கள் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா என்கிறார். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அதற்குள் இருக்கும் எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தி, ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அவர்களது பாணி தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறுகிறார். அப்துல் லீ என்ற பெயரில் இருக்கும் ‘லீ’ கூட அவருடைய திரைப்பயணத்தி...
மொதராத்திரி – திரை விமர்சனம்Rank  (3.5 / 5)

மொதராத்திரி – திரை விமர்சனம்Rank (3.5 / 5)

Latest News, Review
மொதராத்திரி – திரை விமர்சனம்: ஒரே இரவில் நடக்கும் கலகலப்பான காதல், குடும்பக் கதை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் மண் மணம் மாறாத கிராமத்து வாழ்வியலையும், காதல், திருமணம், குடும்ப உறவுகள், சாதி போன்ற சமூகப் பிரச்சனைகளையும் நகைச்சுவையோடும் உணர்வுகளோடும் கலந்து சொல்லும் ஒரு சுவாரஸ்யமான படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘மொதராத்திரி’. இயக்குநர் ராஜா கருப்புசாமி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, பார்வையாளர்களை அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, கிராமத்து மனிதர்களின் இயல்பான பேச்சு, அவர்களது மனநிலை, குடும்பத்துக்குள் இருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் என அனைத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். கதைக்குள் ஒரு கல்யாணக் குழப்பம்! தென் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டி...
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

Latest News, Top Highlights
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘மொத ராத்திரி’ தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், கதைகளைத் தேர்வு செய்வதிலும் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான வணிக அம்சங்களைக் கடந்து, கதையின் புதுமை, கதாபாத்திரங்களின் இயல்பு, உணர்வுகளின் உண்மைத் தன்மை என பல்வேறு அம்சங்களை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, வலுவான கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது தமிழ்...
“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி

“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி

Latest News, Top Highlights
“தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பதே முதல் வெற்றி!” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமா இயக்குநராக தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ராஜா கருப்பசாமி. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவர், முதல் படத்திலேயே வித்தியாசமான திருமணத்தை மையமாக வைத்து குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் கலந்த கதையை சொல்லியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஊடகத்திலிருந்து சினிமா இயக்குநர் வரை... மக்களையும் அவர்களது வெவ்வேறு குணாதிசயங்களையும் நெருக்கமாக கவனிக்கும் வாய்ப்பை பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றிய அனுபவம் தனக்கு வழங்கியதாகக் கூறுகிறா...
‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார்

‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார்

Latest News, Top Highlights
‘மொத ராத்திரி’யில் மனதைப் பேச வைக்கும் கதாபாத்திரம் – அனிஷ்மா அனில்குமார் “வெளியில் சொல்ல முடியாத பல உணர்வுகளை மனதுக்குள் சுமந்து செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறேன்” – அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் அனிஷ்மா அனில்குமார். ‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற இவர், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் அனிஷ்மாவுக்கு மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் வெறுமனே கதாநாயகனுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக இல்லாமல், கதையின் உணர்வுப்பூர்வமான நகர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தனது கதாபாத்திர...
‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

Latest News, Top Highlights
'மொத ராத்திரி' இறுதிக்கட்டத்தை எட்டியது... படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு முதல்பட இயக்குநர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், தற்போது படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ரிஷிகாந்த் ...