
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘AAA’ படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியாக ஓடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்று நினைத்தவர்கள், தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இசையை மையமாக கொண்டு ஒரு திரை படம் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சிம்புவை கதாநாயகனாக போட்டால் சரியாக இருக்கும் என்பதால் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
