
ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR
முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'மஹா' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், STR உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டு...