Saturday, June 27
Shadow

இசையமைப்பாளர் தேவா பிறந்த தின பதிவு

தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் இசையமைப்பாளர் ஆவதற்கு முன் சென்னை தூர்தர்ஷனின் பணி புரிந்து கொண்டு இருந்தார் இஅவர் முதல் முதலில் இசையமைத்தது தாகம் என்ற தொலைக்காட்சி தொடருக்கு தான்

இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையமைத்த திரைப்படங்கள்

மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு, மண்ணுக்கேத்த மைந்தன், நம்ம ஊரு பூவாத்தா, புது மனிதன், வசந்தகால பறவை, நாடோடி காதல், கங்கைக்கரை பாட்டு, மாங்கல்யம் தந்துனானே, அம்மா வந்தாச்சு, அண்ணாமலை, இளவரசன், ஊர் மரியாதை, மதுமதி, கவர்ண்மென்ட் மாப்பிள்ளை, பிரம்மச்சாரி, பொண்டாட்டி ராஜ்ஜியம், சாமுண்டி, சூரியன், தெற்கு தெரு மச்சான், உனக்காக பிறந்தேன், சோலையம்மா, பட்டத்து ராணி, கட்டபொம்மன், செந்தூரப் பாண்டி, ரோஜாவைக் கிள்ளாதே, மூன்றாவது கண், வேடன், என் ஆசை மச்சான்
ரசிகன், இந்து, நம்ம அண்ணாச்சி, ஜல்லிக்கட்டு காளை, பதவி பிரமாணம், ஆசை, பாட்ஷா, சீதனம், காந்தி பிறந்த மண், நாடோடி மன்னன், பொங்கலோ பொங்கல், திருமூர்த்தி, மருமகன், மாமன் மகள், கல்கி, வான்மதி, காலம் மாறிப்போச்சு , அருணாச்சலம், பாரதி கண்ணம்மா, சாதிசனம், காலமெல்லாம் காத்திருப்பே, ஒன்ஸ்மோர், , கண்ணெதிரே தோன்றினாள், பிரியமுடன், ஹலோ, உன்னை தேடி, முகவரி, சாக்லெட், சிட்டிசன், விரும்புகிறேன், பம்மல் கே. சம்பந்தம்

இவர் நடித்த திரைப்படங்கள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சின்ன ராஜா, அடி தடி, மோதி விளையாடு