
விவேகம் தமிழில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது அதே போல உலகெங்கும் படம் மிக பெரிய வசூலில் சாதனை புரிந்துள்ளது இதுவரை நூறு கோடி கிளபில் இல்லாமல் இருந்த அஜித் முதல் முறையாக இணைந்துள்ளார்.
மீண்டும் சிவா மற்றும் அஜித் கூட்டணிக்கு முற்று புள்ளி என்று பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டனர் ஏன் நாமும் வெளியிட்டோம் ஆனால் அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளனர் அஜித் மற்றும் சிவா இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது இதை விட மிக பிரமாண்டமாய் இணைகிறார்களாம்
‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘விவேகம்’ படத்தை உருவாக்கினார் இயக்குனர் சிவா. இப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் படத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் சிவா நிறைய கதைகள் கூறியிருக்கிறார். அஜித்துக்கு ஏற்றக் கதையைத் அவர் தேர்வு செய்தவுடன் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனேகமாக சரித்திரப் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
