இரண்டு உலகத்தில் வாழ்ந்து வந்த நடிகை ஆரம்பத்தில் இஞ்சி இடுப்பழகியாக வலம் வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் தன்னுடைய நடிப்பில் தன்னுடைய அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று நினைத்த நடிகை, அந்த படத்துக்காக தனது உடல் எடையை அதிகரித்தார். ஆனால், எந்த நேரத்தில் அவர் உடல் எடையை ஏற்றினாரோ, அதற்குபின் அவரால் அந்த உடல் எடையை குறைக்கவே முடியவில்லை.
இவர் உடல் எடையை ஏற்றி நடித்த அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அப்போதைக்கு பெரிய பட்ஜெட்டுடன் உருவாகிவந்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் நடிகைக்கு அவசர அழைப்பு வந்ததால், தடபுடலாக தனது உடல் எடையை குறைக்கும் முடிவில் களமிறங்கினார்.
அதன்பிறகு, அந்த பிரம்மாண்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அந்த நடிகை ரொம்பவும் ஒல்லியாக முன்பு இருந்ததுபோல் காட்சியளித்தார். அதைப் பார்த்தது ரசிகர்கள் அனைவருக்கும் திருப்தியை கொடுத்தது. இந்நிலையில், அந்த நடிகை நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதில் அந்த நடிகையின் தோற்றம், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு நேருக்கு மாறாக இருக்கிறதாம். உடல் எடையை கூட்டி ஆன்ட்டி நடிகை போல் தோற்றமளித்தவர், தற்போது இந்த படத்தில் ஆன்ட்டிக்கு அக்கா மாதிரியான தோற்றத்தில் இருக்கிறாராம். இவருடைய தோற்றத்தை பார்த்துதான் இந்த படத்தின் இயக்குனரே அவருக்கு சில காட்சிகள் வைத்தாராம்.
இதனால், பிரம்மாண்ட படத்தின் போஸ்டரில் அந்த நடிகையின் புகைப்படத்தை கிராபிக்ஸ் முறையில் மாற்றியிருப்பார்களோ என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி, ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய தோற்றத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகை, எப்போது முற்றுப்புள்ளி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.