விஜய் கேரியரில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் செய்வது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்பட்டது.
ஆனால் முழு கதையையும் கேட்ட வேண்டும். கேட்டு பிடித்திருந்தால்தான் நடிப்பேன் என பிகு செய்கிறாராம் சோனாக்ஷி. லிங்கா கொடுத்த கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது. இத்தனைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்தான் முக்கிய வெற்றி படம் ஹிந்தியில் கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் சிறந்த அக்ஷன் நாயகி என்ற அந்தஸ்தையும் வாங்கி கொடுத்தவர் .அப்படி பட்ட ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கதை கேட்டு தான் நடிப்பேன் என்று சொல்லது இந்த பொண்ணு இது தான் கலிகாலம்