
‘நிபுணன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். முதலில் தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளிக்கவே, மறுதணிக்கைக்கு சென்றது படக்குழு. இதனால் பட வெளியீடும் பாதிக்கப்பட்டது.
தற்போது மறுதணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்தைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக ‘நிபுணன்’ படக்குழு அறிவித்துள்ளது.
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிபுணன்’ படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வரலெட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ஜூலை 28-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்க
