Wednesday, March 11
Shadow

மீண்டும் வில்லனாக நடிக்கும் அஜித் எந்த படம் யார் இயக்குனர் தகவல்கள் உள்ளே

தமிழ் சினிமாவே மிகவும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது விவேகம் தான் காரணம் ஒன்று அஜித் அடுத்து இந்த படத்தின் டீசர் இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது. அதோடு இந்த டீசர் உலக அளவில் பேசப்பட்டது இதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிகொண்டேபோகிறது அதோடு இந்த படத்தில் மேலும் ஒரு சுவாரிஷமான தகவல் வெளியாகியுள்ளது .

‘சிக்ஸ் பேக்’ ஃபர்ஸ்ட் லுக், ‘சர்வைவா’ சிங்கிள் என, ரிலீஸ் நெருங்க நெருங்க படத்தின் எதிர்பார்ப்பைப் பறக்கவிடுகிறது ‘விவேகம்’ படக்குழு. அஜித், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்தான் வில்லன் என்று கருதப்பட்டு வந்த நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இயக்குனர் சிவா.

“இந்தப் படத்தில், விவேக் ஓபராய் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், அது வில்லன் கதாபாத்திரம் இல்லை” என்று சமீபத்திய பேட்டியில் சிவா தெரிவித்துள்ளார். அப்போ, டீசரில் இடம்பெற்றிருக்கும் ‘The Most wanted Criminal’ வசனம் யாரைப் பற்றியது? ‘விவேகம்’ படத்தின் வில்லன் யார்? என்ற கேள்விக்கு சிலர் கூறும் பதில் இதோ..

இன்டர்போல் அதிகாரியாக இருக்கும் அஜித், ஒரு கட்டத்தில் தனிமைப்படுத்தப்பட, அந்த அமைப்புக்கு எதிராக இயங்குகிறார். அஜித்தை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார் விவேக் ஓபராய். அப்போ ‘விவேகம்’ படத்தின் வில்லன் அஜித் தானே!?

Leave a Reply