Tuesday, April 22
Shadow

சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா ரிலீஸ் ஆகுவதில் மீண்டும் பிரச்சனை பண்ணும் சிம்பு

சிம்பு என்றாலே வம்பு என்று பெயர்ச என்பது நாம் அறிந்த விஷயம்சிம்புவை பற்றி எல்லாம் தெரிந்த கெளதம் மேனன் ரெல்வாசே தேதியை அறிவித்துவிட்டு இப்ப என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்குறார் அடுத்த மாதம் 9ஆம் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், படத்திற்கான 20 சதவீத டப்பிங்கை சிம்பு இன்னமும் முடித்துக் கொடுக்காமலே இருக்கிறார் என்றும் ஒரு தகவல் உண்டு.

தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தராமல் டப்பிங் பேச வரமாட்டேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். இதனிடையே, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை செப்டம்பர் 9ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்த கௌதம் மேனன் தற்போது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துவிட்டாராம்.

செப்டம்பர் 9ம் தேதியன்று நாகசைதன்யா நடித்துள்ள ‘பிரேமம்’ படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘சாகசம் சுவாசகா சாகிப்போ’ படம் வருவதை நாகசைதன்யா விரும்பவில்லையாம்.

‘பிரேமம்’ வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம். அதன் பின் தயாரிப்பாளர்கள் கௌதம் மேனனிடம் பேசி அவருடைய படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

Leave a Reply