Monday, August 10
Shadow

மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?

தெறி துப்பாக்கி கத்தி படங்களுக்கு பிறகு மிக பெரிய வெற்றி வாங்கி கொடுத்த படம் என்றால் அது தெறி அதற்கு அடுத்து வந்த பைரவா கலவையான விமர்சனம் மட்டும் வாங்கியது வர்த்தகரீதியாக இந்த படம் தோல்வி என்று தான் சொல்லணும் . அடுத்து விஜய்க்கு ஒரு முக்கிய வெற்றி வேணும் என்ற சூழ்நிலையில் தான் விஜய் மீண்டும் அட்லீயுடன் சேர்ந்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போக்கிரி , ஜில்லா, தெறி ஸ்டைலில் விஜய் மீண்டும் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன ஸ்டைல் என்பதை கீழே பார்ப்போம்.விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஜய் போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

Leave a Reply