
சமீபத்தில் நடிகை சாவித்ரி வாழ்க்கை சரித்திரம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகி வெளியானது. சாவித்ரி வேடம் ஏற்று கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் ‘மகாநதி’ பெயரில் வெளியானது. இப்படம் ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து நடிகர்களின் வாழ்க்கை சரித்திர படங்கள் வரிசை கட்டத் தொடங்கி உள்ளன. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் வாழ்க்கை படங்கள் தவிர கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சானியா மிர்சா, சாய்னா போன்ற விளையாட்டு வீராங்கனைகள் வாழ்க்கை படமும் உருவாகவிருக்கிறது.
இந்நிலையில் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாறு உருவாகவிருப்பதாகவும் அதை தானே தயாரிக்க உள்ளதாகவும் கிருஷ்ணாவின் பேரனும், நடிகருமான சுதீர்பாபு அறிவித்திருக்கிறார். என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவுக்கு போட்டியாக தெலுங்கில் திகழ்ந்தவர் கிருஷ்ணா. இவர் நடித்த பல படங்கள் தமிழில் அந்த காலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் இவர் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
ஏற்கனவே என்.டி.ராமராவ் வாழ்க்கை சரித்திரம் உருவாகிவரும் நிலையில் கிருஷ்ணா வாழ்க்கை சரித்திர படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மகேஷ்பாபு நடிகர் கிருஷ்ணாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.பாலகிருஷ்ணா, கிருஷ்ணா என எல்லா வாழ்க்கை சரித்திர படங்களும் அடுத்த ஆண்டு (2019) ெவளியாக உள்ளது.
