Wednesday, June 24
Shadow

ரஜினி படத்தில் இளம் மலையாள நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்து விட்டதாகவும், அடுத்ததாக ஒரு பாடலுக்காக படக்குழுவோடு அவர் ஐரோப்பா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.