
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 24 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்து துணை நடிகருக்கான விருது சாம் ராக்வெல் க்கு வழங்கப்பட்டது. திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி என்ற படத்தில் நடித்ததற்காக அந்த விருது சாம் ராக்வெல்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது மூன்று பேருக்கு கிடைத்துள்ளது. டார்க்கஸ்ட் ஹவர் படத்தில் சிகை அலங்காரம் செய்த கசூரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லூசி சிபிக் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் கதாபாத்திரத்தில் நடித்த கேரி ஓல்ட்மேன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தத்ரூபமான சிகை மற்றும் ஒப்பனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில், இரண்டு ஆஸ்கர் விருதுகளை டன்கர்க் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த ஒலி மற்றும் சிறந்து ஒலிக் கலவைக்கான விருதை டன்கர்க் திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த ஒலித் தொகுப்புக்கான விருதை அலெக் கிப்சன் மற்றும் ரிச்சர்டு கிங் ஆகியோர் பெற்றனர். ஒலி கலவைக்கான பிரிவில் டன்கர்க் திரைப்படத்தில் பணியாற்றிய மார்க், கிரேக் லேண்டக்கர், கேரி ரிசோ ஆகியோர் வென்றனர். சிறந்த படத் தொகுப்பிற்கான விருதையும் டன்கர்க் திரைப்படம் வென்றுள்ளது. விருதைப் படத்தொகுப்பாளர் லீ ஸ்மித் பெற்றுக் கொண்டார்.இரண்டாம் உலகப் போர் குறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் டன்கர்க் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார்.
சிறந்த குறு ஆவணப்படம் ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை ஃப்ராங்க் ஸ்டீபல் பெற்றார்.
விருதுகளின் விபரம்,
-தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது
-சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)
-சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் – டார்க்கஸ்ட் அவர்
-சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)
-சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்
-ஆஸ்கர் மேடையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
-சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்
-கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர்… சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்
உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை ஜிம்மி
கெம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.
விருதுகளின் விபரம்,
-தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது
-சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)
-சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் – டார்க்கஸ்ட் அவர்
-சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)
-சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்
-ஆஸ்கர் மேடையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
-சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்
-கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர்… சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது
-சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)
-சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)
-சிறந்த ஒலி கலவை – கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)
-சிறந்த ஒலி தொகுப்பு – ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)
-சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)
-சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)
-சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ
-சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)
-சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி(ஐ, டோன்யா)
-சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி