ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: யாருக்கு என்னென்ன விருது?
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 24 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்து துணை நடிகருக்கான விருது சாம் ராக்வெல் க்கு வழங்கப்பட்டது. திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி என்ற படத்தில் நடித்ததற்காக அந்த விருது சாம் ராக்வெல்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது மூன்று பேருக்கு கிடைத்துள்ளது. டார்க்கஸ்ட் ஹவர் படத்தில் சிகை அலங்காரம் செய்த கசூரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லூசி சிபிக் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் கதாபாத்திரத்தில் நடித்த கேரி ஓல்ட்மேன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தத்ரூபமான சிகை மற்றும் ஒப்பனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில், இரண்டு ஆஸ்கர் விருதுகளை டன்க...