
தனுஷ் தமிழ் சினிமாவில் எல்லோராலும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நபர் என்று தான் சொல்லணும் காரணம் ஒரு நடிகனாக அதுவும் மிகவும் சாதரணமாக ஒல்லியான உருவத்தில் சினிமாவுக்கு வந்தபோது இவரை கிண்டல் செய்யாத நபரே கிடையாது என்று சொல்லலாம் இவரை கிண்டல் செய்த பலர் இவரிடம் இவரின் கால்ஷீட்க்கு தவம் இருக்கும் அளவுக்கு ஒரு முன்னேற்றம் அது நடிப்பில் மட்டும் இல்லை ஒரு பாடகனாக ஒரு பாடலாசிரியராக ஒரு ஒரு தயாரிப்பாளராக இதில் அனைத்திலும் மிக பெரிய வெற்றி இப்போது புதிய அடுத்த கட்ட அவதாரம் இயக்குனர்.
ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் பிரசன்னா சாயாசிங் ரின்ஷன் ஆடுகளம் நரேன் நடிப்பில் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி நடித்திருக்கும் ப. பாண்டி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு வேல்ராஜ் இசை சான் ரோல்டன் . சரிவாங்க கதைகளம் பாப்போம்.
சினிமாவின் சண்டை மாஸ்டர் ராஜ் கிரண் வயதான காலத்தில் தன் ஒரே மகன் பிரசன்னா மருமகள் சாயாசிங் ஒரு பேரன் ஒரு பேத்தி என்று தான் சந்தோசமாக இருப்பதாக நடித்து கொண்டு வாழும் ராஜ்கிரண் மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தும் எதுவும் நடக்காமல் இருக்கும் வயதான தந்தை மகனுக்கு தந்தை பாசம் உண்டு ஆனாலும் அப்பாவை பிடிக்காது அவர் செய்யும் எந்த காரியமும் பிரசன்னாவுக்கு பிடிக்காது இவர் நல்லது செய்தாலும் அது தப்பாக பொய் முடியும்.
இதனால் இவருக்கும் பிரசன்னாவுக்கும் எப்பவும் சண்டை இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் ராஜ்கிரண் பக்கத்துக்கு வீட்டு வருண் இவன் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் தண்டசோறு என்றும் சொல்லலாம் இவனும் இவரின் பேரன்கள் தான் மிகவும் நெருக்கம் ஆனால் பேரன்களிடம் வீட்டை விட்டு போறேன் என்று சொன்னால் விடமாட்டார்கள் என்று வருனிடம் மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். எங்கே போகிறாய் என்று கேட்டதுக்கு தெரியாது எதோ ஹைவே யில் இருக்கிறேன் என்பார் தன் மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பிவிடுகிறார்.
தன் மனம் போன போக்கில் செல்லும் ராஜ்கிரண் சாப்பிட ஒரு ஹோட்டல் செல்கிறார் அங்கு இவரை போலவே வீட்டில் கோவித்து கொண்டு வந்த பல முதியவர்கள் அவர்கள் வாங்க சாப்பிடலாம் என்று அழைக்க ஐவரும் அவர்களிடம் செல்கிறார். உங்களை பற்றி சொல்லுங்க என்றதும் தான் ஒரு பைட்டர் என்றும் தன் விவரங்களை சொல்ல்கிறார். அப்போது அவருக்கு தன் முதல் காதல் அனுபவத்தை சொல்லுகிறார். அது தான் தனுஷ் அதாவது ராஜ்கிரண் சின்ன வயது பவர் பாண்டி சொந்தஊர் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் திருவிழா அந்த திருவிழாவுக்கு வரும் மடோனா தனுஷ் இடையில் காதல் ஆனால் அப்பா ஆடுகளம் நரேன் இதை கவனித்து இருவரையும் பிரிக்கிறார்.
இவரை கண்டு பிடிக்க போகிறேன் என்று ராஜ்கிரண் சொல்ல எப்படி என்றதும் தெரியவில்லை என்று சொல்ல அங்கு இருந்த ஒரு முதியவர் உங்கள் காதலி அப்பா பெயரை சொல்லுங்க நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி முக புத்தகம் (face book)யின் மூலம் அவர் ரேவதி ஹய்ட்ராபாத் இருப்பதாக சொல்ல உடனே அவருக்கு முகநூளில் செய்தி அனுப்புகிறார். இதில் ரேவதி அவருக்கு பதில் கூறினார இருவரும் இணைந்தார்களா என்பது தான் மீதிகதை.
ராஜ்கிரண் முதல் பகுதியில் ஒரு சண்டை மாஸ்டர் அப்புறம் பாசத்துக்கு எங்கும் அப்பாவாக மிகவும் அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் மீண்டும் சினிமாவில் ஸ்டன்ட் போடும் காட்சி வந்ததும் அதை தன் பேரன்களிடம் நான் சண்டை போட்டேன் என்று குழந்தை மாதிரி சொல்லும் போதும் சரி அதே நேரத்தில் ஸ்டன்ட் கலைஞர்கள் டேய் பவர் பாண்டி மாஸ்டர் என்று அவரின் காலில் விழும் போதும் நடிப்பில் சும்மா நம்மை கண் கலங்கவைகிறார். இரண்டாம் பாதியில் தன் காதலி ரேவதியை பார்க்க போகும் அவளும் பார்த்தவுடன் அவருடன் செய்யும் குறும்புகள் செம கலகலப்பு அதே போல உன் மனதில் நான் இருக்கேனா என்று கேக்கும் இடத்தில செம பின்னி இருக்கிறார் நடிப்பில் வாவ் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பு.
ரேவதி சின்ன கதாபாத்திரம் ஆனால் நம்மை அப்படியே கவருகிறார் தன் காதலன் வந்து இருப்பதையும் அவன் இப்படி சொல்லுகிறான் என்று தன் மகள் திவ்யதர்ஷினியிடம் சொல்லும் போதும் அவள் தப்பு இல்லை நீ அவரை மீண்டும் அவருடன் சேர்ந்து இரு என்று சொல்லும் போது ஒரு நடிப்பு அடேங்கப்பா அமர்களம். இயக்குனர் நடிப்பை மிகவும் யதார்த்தமாக வாங்கி இருக்கிறார். அதே போல வயதான காலத்தில் கண்டிப்பாக துணை வேண்டும் என்ற செய்தியை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் தனுஷ் முதல் படமா என்று வியக்கும் அளவுக்கு படத்தை இயக்கி உள்ளார் என்று தான் சொல்லணும் அருமையான கதை பேருக்கு தான் பவர் பாண்டி என்ற தலைப்பு ஆனால் படத்தில் பாசம் என்ற பவர் பற்றி தான் சொல்லி இருக்கிறார். ஒரு தந்தையின் பாசபோரட்டம் ஒரு மகனின் பாசம் போராட்டம் பேரன்களின் அன்பு காதலி நட்பு என்று வாழ்கையில் நாம் சந்திக்கும் எல்லோரின் பாசபோராட்டம் தான் இந்த பவர் பாண்டி படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது திரைகதை மற்றும் வசனம் என்று தான் சொல்லணும். முதல் பாதி படம் இயக்குனர் விசுவின் படம் இரண்டாம் பாதி இயக்குனர் தனுஷ் படம் அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் வாவ் நம் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் அது மட்டும் இல்லை மொத்த திரையரங்கமே கைதட்டலில் அரங்கம் அதிரும் அளவுக்கு மிக சிறப்பான கிளைமாக்ஸ்
படத்துக்கு மேலும் பலம் என்றால் அது பிரசன்னா மிகவும் அருமையாக நடித்துள்ளார் தன் தந்தை இருக்கும் பொது அவரின் அருமை தெரியாமல் அவரை அவமரியாதை செய்வதும் அதே அவர் வீட்டை விட்டு போன பின் அவரின் பாசத்துக்கு எங்கும் மகனாகவும் பிரமாதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் . சாயாசிங் கொஞ்ச நேரம் என்றாலும் மிகவும் நிறைவாக நடித்துள்ளார் .
படத்துக்கு மேலும் பலம் என்றால் அது ஷான் ரோல்டன் இசை என்று தான் சொல்லணும் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி அருமை அதேபோல வேல்ராஜ் ஒளிப்பதிவு மிகவும் அருமை கிராமத்துக்கு அதே போல நகரம் என்று இரண்டும் மிக வித்தியாசம் அருமையால கலர் டோன் சிம்ப்லி சூப்பர்.
மொத்தத்தில் ப பாண்டி பாசபாண்டி Rank 4/5
